ஆப்கனில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித குரு கிரந்த் சாகிப்பின் 3 பிரதிகளை பெற்றுக் கொண்டார் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

0 2409

ஆப்கனில் இருந்து மீட்கப்பட்டவர்களுடன் கொண்டு வரப்பட்ட சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பின் 3 பிரதிகளை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டெல்லி விமான நிலையத்தில் வைத்து பெற்றுக் கொண்டார்.

சீக்கியர் மற்றும் இந்துக்களான 46 ஆப்கன் குடிமக்கள் மற்றும் இந்தியர்கள் என 78 பேருடன் மீட்பு விமானம் டெல்லி வந்தது. அதில் 3 சூட்கேசுகளில் வைத்து இந்த புனித நூல் எடுத்து வரப்பட்டது. அதில் ஒரு சூட்கேசை பயபக்தியுடன் தாம் தலையில் வைத்து நிற்கும் புகைப்படத்தை ஹர்தீப் சிங் பூரி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இரண்டு பேருடன் காலணி இல்லாமல் அவர் விமானத்திற்கு அருகே சென்று சத்னாம் ஸ்ரீ வாகேகுரு என்று பிரார்த்தித்தவாறு புனித நூலை அவர் பெற்றுக் கொண்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments