அயோத்தி நகரை முழு சோலார் நகராக மாற்ற உத்தர பிரதேச அரசு முடிவு
ராமர் கோவில் கட்டுப்பட்டுவரும் அயோத்தியா நகரை,முழுமையான சோலார் எனப்படும் சூரிய ஒளிசக்தி நகராக மாற்ற உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை L&T நிறுவனம் தயாரித்து வருகிறது.அதன்படி ராமர் கோயிலில் சூரியமின்சக்தி உற்பத்திக்கான அமைப்புகள் நிறுவப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான சமுதாய சமையலறை உள்ளிட்ட கோவிலின் அனைத்து மின் தேவைகளுக்கும் சூரியமின்சக்தியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தங்களது வீடுகளில் சூரிய மின்தகடுகளை பொருத்த முன்வருபவர்களுக்கு கூடுதல் ஊக்கத் தொகை சலுகைகளை அளிக்கும் வகையில் தனது 2017 ஆம் ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையில் திருத்தங்களை கொண்டு வரவும் மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
Comments