சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி நிரம்பியது
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி 8 மாதங்களுக்குப் பிறகு தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள வீராணம் ஏரிக்கு தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரையிலுள்ள கீழணையில் இருந்து தண்ணீர் வருகிறது.
தொடர் மழை காரணமாகவும், கீழணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47 புள்ளி 50 அடியை எட்டியுள்ளது.
ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,652 கன அடி வீதமாக உள்ள நிலையில், சென்னையின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 52கன அடி வீதம் தண்ணீர் குழாய் மூலம் எடுத்துவரப்படுகிறது.
Comments