கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்க, சாட்சி ரவி உயர் நீதிமன்றத்தில் மனு
கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சாட்சி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவில், அரசுத்தரப்பில் 41 சாட்சிக்ள் விசாரிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகள் விசாரணை இன்னும் துவங்கவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுமாறும் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்
Comments