பாதுகாப்பு நிலவரம் குறித்து ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன், பிரதமர் மோடி ஆலோசனை

0 2050
பாதுகாப்பு நிலவரம் குறித்து ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன், பிரதமர் மோடி ஆலோசனை

ஆப்கான் பிரச்சனை தொடர்பாக ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

ஆப்கான் பாதுகாப்பு நிலவரம் மற்றும் இதர நாடுகளில் ஏற்படக் கூடிய தாக்கம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். காபூல் விமான நிலையத்தில் அடைக்கலம் புகுந்தவர்களை விரைவில் வெளியேற்றுவதன் அவசியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

காபூல் விமான நிலையத்தில் வெளியேற்றம் முழுவீச்சில் நடைபெறும் நிலையில் காவலுக்கு நிற்கும் படைகளில் ஜெர்மானிய வீரர்களும் உள்ளனர். நேற்று விமான நிலையத்தை காவல் காக்கும் வீரர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments