அமிதாப்பின் ரூ.6 கோடி காரை யாரு வச்சிருக்கா.? ரோல்ஸ்ராய்ஸ் ரோதனைகள்

0 6301
அமிதாப்பின் ரூ.6 கோடி காரை யாரு வச்சிருக்கா.? ரோல்ஸ்ராய்ஸ் ரோதனைகள்

ரோல்ஸ்ராய்ஸ் காருக்கும், நம்ம சினிமாஹீரோக்களுக்கும் போதாதகாலம் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு அவர்களது அந்தஸ்தை சமூகத்தில் உயர்த்திக் காட்டும் என்று கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட கார்களால் உருவாகும் சர்ச்சை அவர்களின் இமேஜை டேமேஜ் செய்து வருகின்றது.

அந்தவகையில் இந்தமுறை ரோல்ஸ்ராய்ஸ் காரை விற்றதால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் 80 களின் பாலிவுட் டான்.... சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்..!

பெங்களூருவில் ஏராளமான வாகனங்கள் உரிய வரிகட்டாமல் அண்டை மாநிலங்களின் பதிவெண்ணுடன் இயக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பெங்களூரு டி.பி சிட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அந்தவழியாக வந்த மகாராஷ்டிர மாநில பதிவெண் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் காரை மடக்கி ஆய்வு செய்தனர்.

அந்த காரில், ஆர்.சி புத்தகம், இன்சூரண்ஸ் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை , அலுவலகத்தில் இருப்பதாகவும் எடுத்து வருவதாகவும் கூறி சமாளித்தனர், இதையடுத்து அந்த காரை பறிமுதல் செய்து விசாரித்த போது அந்த கார் தங்களுக்கு சொந்தமானது என்று தெரிவித்த உம்ரா குழுமத்தினர், காருக்கு உரிய ஆவணங்கள் என்று சிலவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஒப்படைத்த ஆவணங்களில் இருந்து அந்த கார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அமிதாப்பச்சனிடம் 6 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கிய அந்தகாரை பெயர் மாற்றம் செய்தால் சில கோடிகள் மாநில அரசுக்கு வரியாக கொடுக்க வேண்டி இருக்கும் என்பதால் பெயரை கூட மாற்றாமல் இயக்கிவந்தது தெரியவந்தது. மேலும் ஒருவர் தனது வாகனத்தை விற்றால் முறைப்படி பெயர் மாற்றம் செய்து கொடுத்துவிட வேண்டும் இல்லையேல் , அந்த கார் ஏதாவது குற்ற வழக்கில் சிக்கினால் யார் பெயரில் உள்ளதோ அவர் தான் அந்த குற்ற நிகழ்வுக்கு பொறுப்பாகும் நிலை உருவாகும், அந்தவகையில் கார் அமிதாப்பச்சன் பெயரில் இருப்பதால் இந்த காருக்கான அபராதத்தை அவர் பெயரில் தான் வசூலிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்ததால் உம்ரா குழுமத்தினர் திகைப்பில் ஆழ்ந்தனர்.

அமிதாப் வந்து அபராதத்தை செலுத்துவாரா ? அல்லது தனது வழக்கறிஞர் மூலம் வாதாடி அபராதத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவாரா ? என்பது இனி தான் தெரியவரும், அதுவரை 6 கோடிகளை அள்ளிக்கொடுத்து அமிதாப்பிடம் வாங்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் போக்குவரத்து அதிகாரிகளின் பிடியில் இருக்கும் என்று கூறப்படுகின்றது. 6 கோடி ரூபாய்க்கு காரை விற்கும் போதே அமிதாப் முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டதா ? என்பதை உறுதிப்படுத்தி இருந்தால் தற்போது வீணான சர்ச்சையில் சிக்கி இருக்கமாட்டார் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமிதாப் கார் மட்டுமல்ல புதுச்சேரி மற்றும் கோவா பதிவெண்ணுடன் பெங்களூரில் இயக்கப்பட்ட மொத்தம் 10 சொகுசு கார்களை உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடதக்கது. தங்கள் அந்தஸ்த்தை சமூகத்தில் உயர்த்திக் காட்ட சொகுசு கார் வாங்குவது முக்கியம் அல்ல அதற்கு உண்டான வரியை கட்ட வேண்டியது அனைவரின் கடமை என்று சுட்டிக்காட்டுகின்றனர் போக்குவரத்து அதிகாரிகள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments