காபூலில் 20,000 பேர் தவிப்பு.. மீட்பதற்காக 33 விமானங்கள் அனுப்பி வைத்த அமெரிக்கா..!

0 3043
காபூலில் 20,000 பேர் தவிப்பு மீட்பதற்காக அமெரிக்க விமானப்படையின் 33 விமானங்கள் செல்வதாகத் தகவல்

காபூல் நகரைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ள போதும் அங்குள்ள விமான நிலையம் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

தாலிபான்களுக்கு அஞ்சி இருபதாயிரம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்று புகலிடம் தேடும் நோக்கில் விமான நிலையத்தில் குவிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களை மீட்பதற்காக அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த சி 17 வகையைச் சேர்ந்த 33 விமானங்கள் காபூலுக்கு விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 4 ஜெட் எஞ்சின்களைக் கொண்ட இந்த விமானங்கள் ஒவ்வொன்றும் 400 பேரை ஏற்றிச் செல்லும் திறன் படைத்தவையாகும். இதனால் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை ஆப்கானிஸ்தானில் இருந்து பிற நாடுகளுக்கு வெளியேற்ற முடியும். 

அமெரிக்கக் குடிமக்கள், அமெரிக்காவில் பணியாற்றும் விசா பெற்றவர்கள், நேட்டோ நாடுகளின் குடிமக்களை மட்டுமே விமான நிலையத்துக்குள் அனுமதிப்பதாகவும், அமெரிக்கப் படையினர், நிறுவனங்களுக்காகப் பணியாற்றியதால் நாட்டைவிட்டு வெளியேற விரும்புவோரை அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆகஸ்டு 14 முதல் இதுவரை அமெரிக்கா, நேட்டோ நாடுகளைச் சேர்ந்த விமானங்களில் முப்பதாயிரம் பேரை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே ஆப்கானிஸ்தானில் ஜப்பானிய முகமைகளிலும், நிறுவனங்களிலும் உள்ள ஜப்பானியர்கள், அந்த நிறுவனங்களுக்காகப் பணியாற்றிய பிற நாட்டவர்களை வெளியேற்றுவதற்காக ராணுவப் போக்குவரத்து விமானங்களை அனுப்ப உள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments