ஆப்கன் நிலவரம் குறித்துப் பேச நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் வியாழனன்று நடைபெறும்
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் கைப்பற்றியதையடுத்துக் காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள், தூதரகப் பாதுகாவலர்கள் விமானங்களில் மீட்டுவரப்பட்டனர்.
அதன்பின்னர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சீக்கியர்கள், இந்துக்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். இதுவரை எழுநூற்றுக்கு மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அரசால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுக்கு விளக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வியாழனன்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி அழைப்பு விடுத்துள்ளார்.
அந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலவரம், அங்கிருந்து இந்தியர்களை மீட்க எடுத்த நடவடிக்கை பற்றி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Comments