மக்களுக்கு 7000 கிலோ வெண்டைக்காயை இலவசமாக வழங்கிய விவசாயி; முண்டியடித்து கொண்டு வாங்கி சென்ற மக்கள்..!

0 2673

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே போதிய விலை கிடைக்காததால் 7 ஆயிரம் கிலோ வெண்டைக்காயை விவசாயி ஒருவர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். அதனை மக்கள் முண்டியடித்து கொண்டு பைகளில் வாங்கி சென்றனர்.

வண்டிப்பாளையம், சின்னகுப்பம், மூலசமுத்திரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிகளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், ஒரு கிலோ வெண்டைக்காய் 2 ரூபாய்க்கு மட்டுமே விலை போவதால், போக்குவரத்து செலவிற்கு கூட விலை கிடைக்காது என்பதால் பறித்த காய்களை வீணாக குப்பையில் கொட்டுவதை விட, மக்களுக்கு கொடுக்க விரும்பியதாக வெண்டைக்காயை இலவசமாக வழங்கிய விவசாயி அழகுஇளங்கோ கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments