கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

0 4204

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோரையும் விசாரிக்க உத்தரவிடக் கோரி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்கக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்து சயான் பேசியதின் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் காணாமல் போன பொருட்கள் எவை, எவை என்பது பற்றி சசிகலாவுக்கும், இளவரசிக்கும் தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும், முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments