3 போக்சோ வழக்குகளில் சிக்கிய நிலையில், தான் ஆண்மையற்றவர் என வாக்குமூலம் அளித்த சிவசங்கர் பாபா

0 3311

3 போக்சோ வழக்குகளில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபா, தான் ஆண்மையற்றவர் என சிபிசிஐடி போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிபிசிஐடி விசாரணையின்போது, ஆண்மையற்ற தன்னால் எப்படி பாலியல் வன்முறைகளில் ஈடுபட முடியும் என சிவசங்கர் பாபா கூறியதாக கூறப்படுகிறது. மேலும் இதே காரணத்தை கூறி அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, சிவசங்கர் பாபாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் வசித்து வருவதாக குறிப்பிட்டதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர்.

மகன், மகள் உள்ள போது ஆண்மையற்றவர் என எப்படி குறிப்பிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தனர். சாமியார்களின் வழக்கமான பாணியில், பாலியல் வழக்கில் இருந்து தப்பிக்க, தான் ஆண்மையற்றவர் என சிவசங்கர் பாபா கூறுகிறாரா என கேள்வி எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments