ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ’தலைவி’ படம் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாவதாக அறிவிப்பு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தலைவி படம் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி இப்படம் வெளியாக இருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு தற்போது செப்டம்பர் 10ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments