கொரோனா நோயாளிகளுக்கு ஐவர்மெக்டின் மருந்தை பயன்படுத்துவதா? அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை
கொரோனா நோயாளிகளுக்கு ஐவர்மெக்டின் மருந்தை பயன்படுத்துவதற்கு அவர்கள் மாடோ, குதிரையோ அல்ல என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.
மனிதர்களுக்கு கொரோனாவை தடுக்கவோ சிகிச்சை அளிக்கவோ ஐவர்மெக்டின் மருந்தை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஆனால், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மிஸிசிப்பி மாநிலத்தில் பலரும் ஐவர்மெக்டினை பயன்படுத்தியுள்ளனர். அதிலும் கால்நடைகளுக்கு மருந்து விநியோகிக்கும் மையங்களில் இருந்து இந்த மருந்தை வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.
மாடுகள், குதிரைகளுக்காக தயாரிக்கப்படும் ஐவர்மெக்டின், அதிக செறிவு கொண்டது என்றும், அதை மனிதர்களுக்கு பயன்படுத்தும்போது நஞ்சாக மாறிவிடும் என்று அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.
இதற்கேற்ப, மிஸிசிப்பி நஞ்சு தடுப்பு மையத்திற்கு வந்த, 70 சதவீதத்திற்கும் அதிகமான அழைப்புகள், கால்நடை மருந்து விநியோக மையங்கள் மூலம் ஐவர்மெக்டினை வாங்கி பயன்படுத்தியவர்களிடமிருந்தே வந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.
Comments