கோவில் நிலத்தை பிற பயன்பாட்டுகளுக்கு உபயோகிக்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
அறநிலையத்துறை சட்டப்படி கோவில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக கோவில் நிலங்களை பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள வையப்பமலை சுப்ரமணியசாமி கோவிலுக்கு சொந்தமானது என கூறப்படும் 10.64 ஹெக்டேரை வருவாய்த்துறை ,81 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா போட்டு கொடுத்துள்ளது. இதற்கு எதிரான வழக்கு விசாரணையில், பட்டா வழங்கபட்ட இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை எனவும், அரசு நிலம் தான் பட்டா போடப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி அறநிலையத்துறை ஆணையரின் தடையில்லா சான்று இல்லாமல் பட்டா மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.
Comments