காபூல் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க ஆப்கானிய குடும்பம்; கைக்குழந்தையுடன் பெட்டி, பைகளுடன் ஒருவாரமாகத் தவிப்பு

0 2797

காபூல் விமான நிலையத்தில் ஒருவாரமாகச் சிக்கித் தவிக்கும் அமெரிக்க ஆப்கானிய குடும்பத்தினர் தங்களை விரைவில் அழைத்துச் செல்ல வேண்டும் என அமெரிக்க அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரனாஸ் சசாய் என்கிற பெண் புதிதாகப் பிறந்த தனது குழந்தை, தனது தந்தை ஆகியோருடன் கடந்த மாதம் அமெரிக்காவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள தனது கணவரையும் அழைத்துக்கொண்டு மீண்டும் செப்டம்பர் 8ஆம் நாள் அமெரிக்காவுக்குப் புறப்படத் திட்டமிட்டுள்ளனர்.

அதற்கிடையே நாட்டைத் தாலிபான்கள் கைப்பற்றி விட்டதால் அச்சத்தில் குடும்பத்துடன் முன்கூட்டியே காபூல் விமான நிலையத்துக்கு வந்துவிட்டனர். அமெரிக்கப் படையினர் கொடுத்த உணவை உட்கொண்டு கைக்குழந்தையுடன் விமான நிலையத்திலேயே இந்தக் குடும்பம் தவித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments