அதிமுக ஆட்சியில் அண்ணா நூலகத்தை வாடகைக்கு விட்டதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் அதிமுக ஆட்சியில் அண்ணா நூலகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அது வரை திருமணத்துக்கு வாடகைக்கு விட்டுப் பாழடிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய செங்கம் தொகுதி உறுப்பினர் கிரி, அதிமுக ஆட்சியில் அண்ணா நூலகம் மோசமான நிலையில் வீணடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், அதிமுக ஆட்சியில் அண்ணா நூலகத்தின் மேம்பாட்டுப் பணிக்கு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாகவும், கல்வித் தொலைக்காட்சி தொடங்கியதாகவும், குடிமைப் பணித் தேர்வுக்குப் பயிற்சியளிக்கும் பணிகளைத் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர், நீதிமன்றம் வரை சென்று நூலகத்தை மீட்டெடுத்ததாகவும், வருங்காலத்தில் நூலகம் செம்மைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
Comments