நாடு முழுவதும் சாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - பிரதமரை சந்தித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தல்

0 2937

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து நாடு முழுவதும் சாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ், ஜித்தன் ராம் மஞ்சி உள்ளிட்டோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினர். அப்போது, கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை நிர்ணயிக்கவும் உறுதிப்படுத்தவும் ஏதுவாக நாடு முழுவதும் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், பிரதமர் தக்க முடிவை எடுப்பார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments