தஞ்சாவூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழப்பு?

0 2090

தஞ்சாவூரில் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி சாமிநாதன் வீட்டில் கடந்த 12-ந் தேதி 10 சவரன் நகையும், 10 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பல்வேறு திருட்டு உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய சத்தியவான் என்பவரை தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள இடத்தில் வைத்து சத்தியவானிடம் விசாரணை நடத்திய போது, போலீசார் அவரை தாக்கியதாக உறவினர்கள் புகார் கூறுகின்றனர். ஆனால் விசாரணையின் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சத்தியவான், செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments