ரஷ்யாவிடம் இருந்து 70 ஆயிரம் நவீன துப்பாக்கிகளை வாங்குகிறது இந்தியா

0 3442

ரஷ்யாவிடம் இருந்து 70 ஆயிரம் AK 203 ரக போர் துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

மொத்தம் ஏழரை லட்சம் AK-203 துப்பாக்கிகளை வாங்க இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2019 பிப்ரவரியில் அரசு மட்டத்திலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் உத்தர பிரதேச மாநிலம் கோர்வா-வில் துப்பாக்கிகளை தயாரிக்க இந்தோ ரஷ்யன் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனமும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் முதல் கட்டமாக 70 ஆயிரம் AK 203  துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளன.  இதைப் போன்று, ரஷ்யாவிடம் ஆர்டர் கொடுத்துள்ள பல்நோக்கு பயன்பாட்டுக்கான Ka-226T ஹெலிகாப்டர்களும் தரம் மேம்படுத்தப்பட்டு வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments