பொறியியல் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் சிக்கலை தவிர்க்க 10-ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் கொள்ள அறிவுறுத்தல்

0 3972

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், நடப்பு ஆண்டில் கூடுதலாக 10-ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக B.E., B.Tech., மாணவர்கள் சேர்க்கைக்கான புதிய வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த ஆண்டு பெருந்தொற்று காரணமாக +2 மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதால், தரவரிசைப் பட்டியலில் ஒரே மதிப்பெண்களை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த சிக்கலைத் தவிர்க்க, கணிதம், இயற்பியல், Optional பாட மதிப்பெண்கள், 12-ம் வகுப்பு மொத்த மதிப்பெண்கள், 10-ம் வகுப்பு மதிப்பெண்கள், பிறந்த தேதி, ரேண்டம் எண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments