இந்தியன் - 2 படம் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் சரிசெய்யப்படும் - கமல்

0 4051

இந்தியன் 2 படம் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் சரிசெய்யப்படும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கிரேன் விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு அதன்பின் மீண்டும் தொடங்கப்படவில்லை. இதனிடையே, தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும், இயக்குநர் ஷங்கருக்கும் இடையே மோதல் ஏற்படவே, இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.

இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த கமல்ஹாசன், சமீபத்திய பேட்டியில், இந்தியன் 2 படத்தில் 60% காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும், தனது விக்ரம் படத்தின் படபிடிப்பு முடிந்தவுடன் இந்தியன் 2 பட பணிகள் தொடங்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments