சீனா நடத்திய அணுகுண்டு சோதனைகளால் 1.94 லட்சம் மக்கள் இறந்திருக்க வாய்ப்பு
சீனா நடத்திய அணுகுண்டு சோதனைகளின் விளைவாக ஒரு லட்சத்து 94 ஆயிரம் பேர் வரை கதிர்வீச்சால் உயிரிழந்ததிருக்கலாம் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1964 முதல் 1996ம் ஆண்டு வரை சீனா 45 அணுகுண்டுகளை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது. இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சின் விளைவாக சுமார் 12 லட்சம் மக்கள் ரத்தப் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தி நேஷனல் இன்ட்ரஸ்ட் என்ற ஆய்வுப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
வெவ்வேறு இனப் பின்னணியைச் சேர்ந்த சுமார் இருபது மில்லியன் மக்கள் வசிக்கும் சின்ஜியாங் பகுதியில் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Comments