அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் காட்டாற்று வெள்ளத்தால் கடும் பாதிப்பு
அமெரிக்காவின் Tennessee மாகாணத்தில் காட்டாற்று வெள்ளம் புரட்டிப் போட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
டிக்சன், ஹிக்மன், ஹூஸ்டன், உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள சேதம் அதிகமாக காணப்படுகிறது. கனமழை காரணமாக வாகனங்கள், குடியிருப்புகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. வீடுகளை இழந்த மக்கள் சாலைகளில் சமைத்து உண்டு, உறங்கி வருகின்றனர்.
வெள்ளத்தால் ஏறக்குறைய 4 ஆயிரத்து 200 பேர் மின்சாரமின்றி தவித்து வருவதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments