பக்கத்து வீட்டு குளியலறைக்குள் எஸ்.ஐ மகன் சேட்டை..! பவர்பேங்குடன் ரகசிய காமிரா..!
தஞ்சாவூரில் பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்குவதற்காக குளியலறையில் ரகசிய காமிரா பொறுத்தி பெண்கள் குளிப்பதை படம் பிடித்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கும் பக்கத்தில் வீட்டில் வசிக்கும் ஓய்வுப்பெற்ற காவல் உதவி ஆய்வாளர் இக்பாலுக்கும் இடத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை இவரது வீட்டின் குளியலறையின் மேல் பகுதியில் ஏதோ சின்னஞ்சிறிய லைட் மின்னுவது போல் இருப்பதை பார்த்த வெங்கடேசன் மனைவி, தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக குளியலறை சென்று பார்த்த போது அங்கு செல்போன் வெப் கேமரா ஒன்று சார்ஜ் இறங்காமல் காட்சிகளை பதிவு செய்ய வசதியாக பவர்பேங்க் உடன் இணைத்து சுவற்றில் ஒட்டிவைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அந்த ரகசிய காமிராயை சுவற்றில் இருந்து பிரித்து எடுத்த வெங்கடேஷ் தஞ்சாவூர் மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரித்த காவல்துறையினர் வெங்கடேஷின் வீட்டின் அருகில் வசிக்கும் ஓய்வுபெற்ற உதவி கவல் ஆய்வாளர் இக்பாலின் மகனான நசீர்அகமது என்பவர் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சதிவேலையை செய்திருப்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
இளைஞர் நசீர் அகமது ஏற்கனவே வெங்கடேஷ் வீட்டில் உள்ள பெண்கள் குளிப்பதை, மாடியில் இருந்து பார்த்ததாகவும், அப்போது இது குறித்து அவர் தந்தையிடம் சொன்ன போது, அவர் தனது மகனை கண்டிக்காமல் வெங்கடேசனுடன் சண்டைக்கு சென்றதாக கூறப்படுகின்றது. வெங்கடேசனின் வீட்டின் பின்புறம் உள்ள குளியலறையையொட்டி இன்னொருத்துக்கு சொந்துமான காலி வீடு ஒன்று உள்ளது.
அந்த வீட்டின் சாவி நசீர் அகமதுவிடம் இருந்ததால் அதனை பயன்படுத்தி காலியாக உள்ள வீட்டின் குளியலறை கண்ணாடியை கழற்றி, ஒரு அடி இடைவெளியில் உள்ள வெங்கடேசன் வீட்டு குளியலறையின் மேல் வெப்கேமராவை ரகசியமாக பொருத்தி வெங்கடேசனின் மனைவி மற்றும் மகள் குளிப்பதை படம்பிடித்ததாக கூறப்படுகின்றது. முன்பகை காரணமாகவும், வெங்கடேசனை அவமானப்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்துடனும் நசீர் அகமது இந்த விபரீத செயலை செய்ததாக கூறப்படுகின்றது.
அந்த வெப் கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் நசீர் அகமதுவின் வீட்டில் உள்ள லேப்டாப்பில் சேமிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் அதனை கைப்பற்றி அழிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் பெண்களுக்கு எதிராக இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் காமுகர்கள் மீது கவல்துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
Comments