கிரீன்லாந்து பனிப்படலத்தின் மிக உயர்ந்த பகுதியில், 71 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக பெய்த கனமழை

0 5742

கிரீன்லாந்து பனிப்படலத்தின் மிக உயர்ந்த பகுதியில், 71 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக கடந்த வாரம் கனமழை பெய்துள்ளது.

1950க்கு பிறகு, கடந்த 14 முதல் 16ம் தேதி வரை மூன்று நாட்களில் மொத்தம் 7 பில்லியன் டன் மழை கிரீன்லாந்து முழுவதும் பெய்துள்ளதாக கூறப்படுகிறது.

மழை மற்றும் அதிக வெப்பநிலை, தீவு முழுவதும் பரவலான பனி உருகலைத் தூண்டியுள்ளதாக மூத்த விஞ்ஞானி வால்ட் மேயர் கூறியுள்ளார்.

அதே வேளையில்,வெப்பமயமாதலினால் ஏற்கனவே அதிகரித்து வரும் விகிதத்தில், அங்கு பனிக்கட்டிகள் உருகி வருவது மிகவும் கவலை அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments