ராமாபுரத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளிலும் தொட்டாலே சிமென்ட் பூச்சுகள் உதிர்வதாக புகார்
சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளை போல, ராமாபுரத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளிலும் தொட்டாலே சிமென்ட் பூச்சுகள் உதிர்வதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ராமாபுரம் பாரதிசாலையில் 78 கோடி மதிப்பில், அடுக்குமாடி குடியிருப்புகள், சுயநிதி பிரிவு மூலம் கட்டி பயனாளர்களுக்கு 2019ஆம் ஆண்டு இறுதியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கே.பி.பார்க் போல இந்த குடியிருப்பின் கட்டிடத்தையும் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கட்டடத்தின் சுவர்கள் சிதலமடைந்து போல மோசமான நிலையில் இருப்பதாகவும், மழை பெய்தால் சுவர்களில் நீர் கசிவதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்
வீடுகள் ஒப்படைக்கப்பட்ட பிறகு மேலும் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கேட்பதாகவும், குடிநீர் வதசதியில்லை, கழிவுநீர் வடிகால் வசதியில்லை என குடியிருப்புவாசிகள் அடுக்கடுக்காக புகார் கூறுகின்றனர்.
Comments