இளையோருக்கான உலகத் தடகளப் போட்டியில் இந்திய வீரர் அமித் காத்ரிக்கு வெள்ளிப் பதக்கம்

0 3842

ளையோருக்கான உலகத் தடகளப் போட்டியில் 10 கிலோமீட்டர் நடைப் பந்தயத்தில் இந்திய வீரர் அமித் காத்ரி வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். கென்யத் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற பந்தயத்தில் கென்ய வீரர் ஹெரிஸ்டோன் 42 நிமிடம் 10 நொடிகளில் தொலைவைக் கடந்து தங்கப் பதக்கம் பெற்றார்.

அவரைவிட 7 நொடிகள் பிந்தி வந்த இந்திய வீரர் அமித் காத்ரி வெள்ளிப் பதக்கம் பெற்றார். உலகத் தடகளப் போட்டி நடைப் பந்தயத்தில் இந்தியா பதக்கம் பெறுவது இதுவே முதன்முறை என இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments