ரூ. 5.85 கோடிக்கு ஏலம் போனது, ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட ஆப்பிள் 2 கம்ப்யூட்டர் உபயோகிப்பாளர் கையேடு

0 3247

ப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்  மற்றும் அதன் சிஇஓ ஆக இருந்த மைக் மார்க்குல்லா ஆகியோர் கையெழுத்திட்டு 1979 ல் வெளியான ஆப்பிள் 2 கம்ப்யூட்டருக்கான உபயோகிப்பாளர் கையேடு, 5 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகி உள்ளது.

Indianapolis Colts என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஜிம் இர்சே  என்பவர்196 பக்கங்கள் உள்ள  கையேட்டை இந்த தொகைக்கு வாங்கியுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் பிரிட்டன் விநியோகஸ்தராகவும், அதன் பின்னர் அதன் நிர்வாக இயக்குநராக இருந்தவருமான மைக்கேல் பிரூவரின் மகனான ஜூலியன் பிரூவருக்கு சொந்தமானது இந்த கையேடு.

அதில் கையைழுத்திட்டுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ், ஜூலியனின் பெயரை குறிப்பிட்டு, உனது தலைமுறை கம்ப்யூட்டர்களுடன் வளரும் முதலாவது தலைமுறை என்றும், அதை வைத்து உலகையே மாற்றுமாறும்  தமது கைப்பட எழுதி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments