12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சைகோவ் டி தடுப்பு மருந்தின் விலை அடுத்த வாரத்தில் தீர்மானிக்கப்படும் -சைடஸ் குழுமத் தலைவர்

0 3326

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 3 டோஸ் சைகோவ் டி கொரோனா தடுப்பு மருந்தின் விலை அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என்றும், செப்டம்பர் நடுப்பகுதியில் வழங்கல் தொடங்கும் என சைடஸ் குழுமத் தலைவர் சர்வீல் பட்டேல் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதத்தில் இருந்து மாதம் ஒரு கோடி டோஸ் என்னும் அளவில் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மருந்து டெல்டா வகை தொற்றுக்கு எதிராகவும் 66 விழுக்காடு செயல்திறன் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். முதல் தடுப்பூசி போட்டதில் இருந்து 28ஆவது, 56ஆவது நாட்களில் முறையே இரண்டாவது, மூன்றாவது தடுப்பூசிகளைப் போட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments