காபூலில் செய்தியாளர்களை தாலிபன்கள் துன்புறுத்தி வருவதாக அமெரிக்கா தகவல்
காபூலை கைப்பற்றிய பிறகு அங்குள்ள பல பத்திரிகையாளர்களை தாலிபன்கள் துன்புறுத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனிடையே ஆப்கனில் உள்ள அமெரிக்கர்கள் நாடு திரும்பவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்ற அதிபர் ஜோ பைடனின் அறிவிப்புக்கு மாற்றமாக, காபூலில் அவர்களுக்கும் தாலிபன்களுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
தாலிபன்கள் அமெரிக்கர்களை அடித்து துன்புறுத்துவதாக வரும் செய்திகளால் கவலை அடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பியும் தெரிவித்துள்ளார்.
Comments