அமெரிக்க படைகள் வெளியேறும் வரை பொறுமை காக்க முடிவு ? ஆக. 31க்கு முன்னர் புதிய அரசு இல்லை : தாலிபன்கள்
ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறும் தினமான ஆகஸ்ட் 31 க்கு முன்னர் புதிய அரசு அமைப்பது பற்றிய எந்த அறிவிப்பையும் தாலிபன்கள் வெளியிட மாட்டார்கள் என கூறப்படுகிறது.
தாலிபன்கள் சார்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தும் குழுவின் தலைவரான அனஸ் ஹக்கானி இது குறித்த வாக்குறுதியை அமெரிக்க தரப்பிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அது வரை தற்போது இருக்கும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை அமைப்பை மாற்றப் போவதில்லை எனவும் தாலிபன்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரம், ஆகஸ்ட் 31 க்குப் பிறகு அமைக்க உள்ள அரசில் ஏற்கனவே உறுதி அளித்தபடி தாலிபன்கள் அல்லாதோரையும் புதிய அரசில் இணைத்துக் கொள்வார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
Comments