மத்திய பிரதேசத்தில் முகரம் ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் , 6 பேர் கைது

0 2360
மத்திய பிரதேசத்தில் முகரம் ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் , 6 பேர் கைது

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெயினியில் நடந்த முகரம் ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தான் சிந்தாபாத் என்று முழக்கங்களை அவர்கள் எழுப்பும் வீடியோ  காட்சி வைரலானதின்  அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இது போன்ற தாலிபன் கலாச்சாரம் இந்தியாவில் சகித்துக் கொள்ளப்படமாட்டாது என எச்சரித்துள்ளார்.

முகரம் ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய போலீசார், கொரோனா காலமானதால் ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என்று கூறியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த  சுமார் 10 பேர் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments