ஸ்பெயினின், கனேரி தீவுகளை கடக்க முயன்ற 52 அகதிகள் உயிரிழப்பு

0 3006
ஸ்பெயினின், கனேரி தீவுகளை கடக்க முயன்ற 52 அகதிகள் உயிரிழப்பு

ஸ்பெயின் கனேரி தீவுகளை கடக்க முயன்ற 52 அகதிகள் கடல் கொந்தளிப்பில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக கனேரி தீவுகளை கடக்க முயன்ற படகு மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

படகில் பெண்கள் உள்பட 53 பேர் பயணித்ததாகவும், ஒரேயொரு பெண்மணியை தவிர்த்து 52 பேரும் இறந்ததாக கூறப்படுகிறது.

கடலில் சடலங்களுக்கு மத்தியில் பெண் மீட்கப்பட்டதாகவும், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments