டெல்லியில் விடிய விடிய பெய்த மழை: சாலைகள் ஆறாக மாறி வாகனங்கள் தத்தளிப்பு
கொட்டித் தீர்த்த கனமழையால் தலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் வெள்ளக்காடாக மாறின. பல சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு முதலே டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது.இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 138 புள்ளி 9 மில்லி மீட்டர் மழை பதிவானது. தொடர் மழையால் முக்கிய வர்த்தக மையமான கனாட் பிளேசில் சாலைகள் ஆறாக மாறி வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன..
டெல்லி ITO முதல் பிரகதி மைதானம் வரை உள்ள சாலை மழை நீரால் ஆறு போல காட்சி அளித்தது. ஆசாத்பூர் மற்றும் மின்டோ ரோடு அன்டர்பாஸ்-களில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றதால் வாகனப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
லஜ்பத் நகர், ஜங்க்புரா உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. டெல்லி பார்டர் குருகிராமில் உள்ள பிரிஸ்டல் சவுக் நீரால் சூழப்பட்டது. அங்கு போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். டெல்லியில் இன்று தொடர்ந்து மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆயுவு மையம், ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments