சைடஸ் கடிலா தடுப்பு மருந்து..! அவசரப் பயன்பாட்டுக்கு ஒப்புதல்..!
சைடஸ் கடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தியாவில் ஒப்புதல் பெற்ற ஆறாவது மருந்தாக உள்ள இதை 12 வயது முதல் 17 வயது வரையுள்ளோருக்கும் பயன்படுத்தலாம்.
இந்தியாவில் ஏற்கெனவே கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஆறாவதாக அகமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ் கடிலா நிறுவனத்தின் சைகோவ் டி என்னும் மருந்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கோவாக்சினுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பு மருந்து இதுவாகும்.
உலகிலேயே டிஎன்ஏ அடிப்படையில் தயாரிக்கப்படும் முதல் தடுப்பு மருந்தான இதை 12 முதல் 18 வயது வரையிலான சிறாருக்கும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தத் தடுப்பு மருந்து புரதச் சுரப்பை உண்டாக்கி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் என்றும், இது 66 புள்ளி 6 விழுக்காடு செயல் திறன் கொண்டிருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Comments