கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம்-சென்னை மாநகராட்சி விளக்கம்

0 3156

குடிசை மாற்று வாரியக் கட்டடத்தின் சுவர்கள், மேல்தளம் ஆகியவற்றில் பூச்சுக்கள் புட்டு உதிர்ந்தது போல உதிர்ந்ததால் கட்டுமானம் தரமாக இல்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தனிமை மையமாகப் பயன்படுத்தியதால் தான் அந்தக் கட்டடம் சேதமடைந்ததாக பிஎஸ்டி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதை மறுத்துள்ள சென்னை மாநகராட்சி, கட்டடச் சேதாரங்களுக்குத் தாங்கள் பொறுப்பில்லை எனத் தெரிவித்துள்ளது.

கொரோனா தனிமை மையமாக இருந்தபோது கட்டில், மெத்தை போன்றவை தான் அங்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றைக் கொண்டு சென்றதால் சேதாரம் ஏற்படவில்லை என்றும் மாநகராட்சித் தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments