கோழிக்கறி கேட்ட விவகாரத்தில் கடைக்காரரைத் தாக்கியதாகக் காவல்துறையினர் 3 பேர் மீது வழக்குப் பதிவு
தூத்துக்குடி மாவட்டம் காடல்குடியில் நள்ளிரவில் கோழிக்கறி கேட்ட விவகாரத்தில் கடைக்காரரைத் தாக்கியதாகக் காவல்துறையினர் 3 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 16ந் தேதி நள்ளிரவில் கோழிக்கடை நடத்தி வரும் முத்துச் செல்வன் செல்போன் எண்ணுக்க தொடர்பு கொண்டு காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறி கோழிக்கறி கேட்டுள்ளனர்.
ஆனால் நள்ளிரவு என்பதால் கறி தர இயலாது என்று கூறி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். ஆனால் கடையில் இருந்து போலீசார் கோழிக்கறியை எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வெள்ளியன்று கடைக்கு வந்த தலைமைக் காவலர்கள் பாலகிருஷ்ணன், பாலமுருகன், காவலர் சதீஷ்குமார் ஆகியோர், கோழியை எடுத்துச் சென்றது குறித்து வெளியே சொன்னதாகக் கூறி முத்துச்செல்வனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த முத்துச்செல்வன் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முத்துச்செல்வன் அளித்த புகாரின் அடிப்படையில் மூவர் மீதும் 5 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
Comments