"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கராத்தே சாகச நிகழ்ச்சியில் தீக்காயம் - கல்லூரி மாணவன் உயிரிழப்பு
புதுக்கோட்டையில், கராத்தே சாகச நிகழ்ச்சியில் தீக்காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த வாரம் புதுக்கோட்டை சிங்க முத்து அய்யனார் கோயில் திடலில் கராத்தே பயின்ற இளைஞர்களின் சாகச நிகழ்ச்சியில், ஸ்ரீ பாலாஜி என்ற கல்லூரி மாணவர் கைகளில் துணியை சுற்றிக் கொண்டு மண்ணெண்ணெய்யில் கையை நனைத்து கொண்டு தீ பற்றவைத்து தீயால் ஓடுகளை உடைக்கும் சாகசத்தை நிகழ்த்தினார்.
அப்போது எதிர்பாராத விதமாக உடலில் தீக்காயம் பட்டு உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Comments