5 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்: அப்போலோ, ரிலையன்ஸ் நிர்வாகத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் கோரிக்கை
அப்போலோ மருத்துவமனையில் 5 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால், அதனை சிஎஸ்ஆர் நிதியுதவியுடன் இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கும், ரிலையன்ஸ் நிர்வாகத்திற்கும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்தார்.
சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் குடலிறக்க சிகிச்சை முறையை, அவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழகத்திற்கு கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே வந்துகொண்டிருக்கிறது என்றும், கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது வெளிப்படையான உன்மை என்றும் குறிப்பிட்டார்.
Comments