ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளுக்காக பணிபுரிந்தவர்களை, வீடு வீடாக சென்று தேடும் தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளுக்காக பணிபுரிந்தவர்களை, வீடு வீடாக சென்று தாலிபான்கள் தேடி வருவதாக, ஐ.நா.வுக்கான உளவுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தாலிபான்கள், பொதுமன்னிப்பு, பெண்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு என உறுதியளித்தாலும் அங்கு ஆயிரக் கணக்கானோர் அச்சத்தின் பிடியில் உள்ளதாக கூறப்படுகிறது. எப்படியாவது தப்பி வெளியேறிவிட வேண்டும் என்ற பரிதவிப்புடன் காபூல் விமான நிலையத்திலும் காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கு உதவியவர்களை தாலிபான்கள் வீடு வீடாகச் சென்று தேடி வருவதாகவும், காபூல் விமான நிலையம் நோக்கி செல்பவர்களை கடும் சோதனைக்கு உள்ளாக்குவதாகவும் கூறப்படுகிறது. அமெக்காவிற்கு உதவிய நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தாலிபான்களிடம் சிக்கினால் கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
Comments