முறையான பாதுகாப்பின்றி கண்ணாடித் துகள்களை ஏற்றிச் சென்ற லாரி: மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த்

0 3121

வேலூரில் முறையான பாதுகாப்பின்றி கண்ணாடி துகள்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பிடித்த திமுக எம்.பி. கதிர் ஆனந்த் போலீசில் ஒப்படைத்தார்.

திருமணத்திற்காக காரில் சென்றுகொண்டிருந்த போது, கதிர் ஆனந்தின் காருக்கு முன்னே, டாரஸ் லாரி ஒன்று நொருங்கிய கண்ணாடித் துகள்களை பாதுகாப்பு அற்ற முறையில் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றுள்ளது.

லாரியில் இருந்து கண்ணாடித் துகள்கள் சிதறி சாலையில் விழுவதை கவனித்த எம்.பி. கதிர் ஆனந்த், லாரியை முந்திச் சென்று மடக்கி பிடித்தார். பின்னர், மற்ற வாகன ஓட்டிகள் கண்ணில் கண்ணாடித் துகள்கள் பட்டால், பாதிப்பை ஏற்படுத்தும் என ஓட்டுநருக்கு அறிவுரைக் கூறிய எம்.பி. லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments