சுற்றுலா வந்த கேரள இளைஞர்கள், 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்
கொடைக்கானல் அருகே 300 அடி பள்ளத்தில் டெம்போ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கேரளாவை சேர்ந்த 17 இளைஞர்கள் காயம் அடைந்தனர்.
எர்ணாகுளத்தை சேர்ந்த 17 இளைஞர்கள் டெம்போ வாகனத்தில் சுற்றுலாவிற்காக கொடைக்கானல் நோக்கி வந்துகொண்டிருந்தனர். கொடைக்கானல்- பழனி மலைச்சாலையில் கூம்பூர் வயல் அருகே வந்துகொண்டிருந்த போது ஓட்டுநர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
சுற்றுவட்டார பகுதி மக்கள் உதவியுடன் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments