இந்தியாவில் 12 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி கோரும் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம்
இந்தியாவில் 12 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்ய ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஏற்கெனவே அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பயாலாஜிக்கல்.இ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இந்த தடுப்பூசி விநியோகிக்கப்பட உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசி போடப்பட உள்ளநிலையில், 12 வயது முதல் 17 வயதுடைய சிறார்களுக்கு பயன்படுத்தலாமா என பரிசோதனை செய்ய ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு அனுமதி கோரி, ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது. சிறார்களுக்கு தடுப்பூசி போடலாமா என்பது குறித்த பரிசோதனையை ஏற்கெனவே பாரத் பயோடெக் மற்றும் சைடஸ் கெடில்லா நிறுவனங்கள் நடத்தி வரும் நிலையில், அடுத்த மாதம் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் சிறார்களுக்கு விரைவில் தடுப்பூசி கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments