ரயில் பயணம் செய்து சக பயணிகளின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயிலில் பயணம் செய்து சக பயணிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
ஒடிசாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புவனேஷ்வர் - ரயஹடா இடையேயான பயணிகள் ரயிலில் நள்ளிரவில் பயணம் செய்தார்.
அப்போது, ரயிலிலுள்ள வசதிகள் குறித்தும், ரயில் பயணத்தின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்பட பல்வேறு விவகாரங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சக பயணிகள் வழங்கிய ஆலோசனைகளையும் அவர் கேட்டு தெரிந்து கொண்டார்.
Comments