மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து வரும் டெஸ்லா நிறுவனம்
டெஸ்லா நிறுவனம் மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து வருவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
டெஸ்லாபோட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மனிதவடிவ ரோபோக்கள், அந்நிறுவனத்தின் தானியங்கி கார்களில் உள்ள சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட, மனிதர்களைப் போல நடமாடும் இந்த ரோபோக்கள், டெஸ்லா கார்களில் உள்ள கேமரா, சென்சார்கள், நியூரல் நெட்ஒர்க்குகளை பயன்படுத்தும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மனிதர்களுக்கு பாதுகாப்பற்ற பணிகள், திரும்பத் திரும்ப செய்ய வேண்டியுள்ள பணிகளை செய்வதற்கு ஏற்ற வகையில் இந்த ரோபோக்கள் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments