காபூல் விமான நிலையம் முன் நிற்கும் மக்கள், துப்பாக்கியால் வானில் சுட்டு அமெரிக்க ராணுவம் எச்சரிக்கை

0 6155

காபூல் விமான நிலைய தடுப்புகளில் ஏறி விமான நிலையத்திற்குள் வர முயன்ற 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கான் மக்களை அமெரிக்க ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கலைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. 

அதேபோல் விமான நிலையத்திற்கு வெளியே நிற்கும் தாலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்துவதால் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் ஆப்கன் மக்கள் இருதலைக் கொள்ளியாகத் தவிக்கும் காட்சி வெளியாகி உள்ளது.


காபூல், Khost, Kunar மற்றும் Nangarhar மாகாண சாலைகளில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் 100 மீட்டர் நீள தேசிய கொடியை சாலையில் எடுத்துச் சென்று தாலிபான்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி பேரணியாக சென்றனர்..

காரில் ஆப்கானிஸ்தான் தேசிய கொடியை வைத்திருந்தவரை தாக்கி கையில் கயிறு கட்டி இழுத்து சென்றும், காரில் இருந்த கொடியை தாலிபான்கள் கசக்கி எறியும் காட்சி வெளியாகியுள்ளது.

காபூல் விமான நிலையம் முன் காத்திருக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மீது தாலிபான்கள் தாக்கும் காட்சி இணையதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

காபூல் விமான நிலைய மின் வேலியை தாண்ட முயற்சிக்கும் மக்களை நோக்கி தாலிபான்கள் துப்பாக்கியால் சுடும் வேதனை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments