இந்தியா பாதுகாப்புத் துறையில் சுயசார்புடன் திகழ வலிமையான ஆயுத உற்பத்தி அவசியம் - அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்தியா பாதுகாப்புத் துறையில் சுயசார்புடன் திகழ உள்நாட்டில் நவீன மற்றும் வலிமையான ஆயுதங்கள் உற்பத்தி அவசியம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தேசத்தின் பாதுகாப்பு சவால்கள் சிக்கலாகியிருப்பதாகவும் அவர் கூறினார். டெல்லியில் உள்நாட்டு பாதுகாப்பு சாதனங்கள் உற்பத்தியைத் தொடங்கி வைத்து பேசிய அவர்,நமது பாதுகாப்புக்கு மற்றவரை சார்ந்து நிற்க முடியாது என்றார்.
ஆயுத உற்பத்தித் துறையில் தனியார் முதலீடு செய்யும்படி ராஜ்நாத்சிங் அழைப்பு விடுத்தார்.
Comments