மிகவும் குட்டையான கன்றை ஈன்ற பசுமாடு ; உயரம் குறைவாக உள்ள கன்று தாயிடம் பால் குடிக்க முடியாமல் தவிப்பு

0 10343
உயரம் குறைவாக உள்ள கன்று தாயிடம் பால் குடிக்க முடியாமல் தவிப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஒரு பசு மாடு வழக்கத்துக்கு மாறாக மிகவும் குட்டையான கன்றை ஈன்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமராட்சி அருகே நளன்புத்தூரைச் சேர்ந்த விஜயன் என்பவர் வளர்த்து வரும் பசுமாடு இதற்கு முன் இருமுறை ஈன்ற கன்றுகள் எந்தக் குறைபாடுமின்றிப் பிறந்ததாகக் கூறப்படுகிறது.

இம்முறை கால்நடை மருத்துவமனையில் இந்தப் பசுவுக்குச் சினை ஊசி போடப்பட்ட நிலையில் இப்போது குட்டையான கன்றை ஈன்றுள்ளது. இந்தக் கன்றின் கால் குளம்புகள் மடங்குவதால் சரியாக நடக்க முடியாமலும், தாயிடம் பால் குடிக்க முடியாமலும் மிகவும் துன்பப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments