மின்னணுக் கருவிகள் இறக்குமதியில் வரி ஏய்த்த வழக்கில் வருவாய்ப் புலனாய்வு இயக்ககத்தில் 300 கோடி ரூபாயைச் செலுத்தியது சாம்சங்
மின்னணுக் கருவிகள் இறக்குமதியில் வரி ஏய்த்த வழக்கில் சாம்சங் இந்தியா நிறுவனம் 300 கோடி ரூபாயை வருவாய்ப் புலனாய்வு இயக்ககத்தில் செலுத்தியுள்ளது.
நான்காம் தலைமுறைத் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பக் கருவிகளைப் பிற நாடுகளில் தயாரித்துத் தென்கொரியாவில் தயாரித்தது போன்று காட்டி சாம்சங் நிறுவனம் இறக்குமதி வரி விலக்குப் பெற்றது வருவாய்ப் புலனாய்வு இயக்கக அதிகாரிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் சாம்சங் நிறுவனம் 500 கோடி ரூபாய் வரி ஏய்த்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் செவ்வாயன்று 300 கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளது.
Comments