சிங்கப்பூரில் பொது இடத்தில் முகக்கவசம் அணியாத இளைஞருக்கு 6 வாரங்கள் சிறை

0 2749
சிங்கப்பூரில் பொது இடத்தில் முகக்கவசம் அணிய மறுத்து கொரோனா விதிகளை மீறியதாக, இங்கிலாந்து இளைஞருக்கு 6 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பொது இடத்தில் முகக்கவசம் அணிய மறுத்து கொரோனா விதிகளை மீறியதாக, இங்கிலாந்து இளைஞருக்கு 6 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Benjamin Glynn என்ற அந்த இளைஞர், கடந்த மே மாதம் ரயிலில் முகக்கவசம் இன்றி பயணித்ததோடு, அங்கிருந்த பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் விதத்திலும், மிரட்டும் விதத்திலும் செயல்பட்டுள்ளார்.

இந்த வழக்கில்,சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பெஞ்சமின் கிலின், தம் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட்டு, பாஸ்போர்ட்டை திரும்பி தருமாறு கோரினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பெஞ்சமின் கிலினுக்கு 6 வாரங்கள் சிறை தண்டனை விதித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments